Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருமலைக்கு காரில் துப்பாக்கியுடன் வந்தவரால் பரபரப்பு!

 திருப்பதி, திருமலை செல்லும் வழியில் கைதுப்பாக்கியுடன் காரில் வந்தவர் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுதந்திர தின கொண்டாட்டத்தை திருப்பதியில் நடத்த ஆந்திர மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதிக்கு வருகை தருவதால் நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் திருமலைக்குச் செல்லும் வழியில் உள்ள டோல்கேட் பகுதியில்  தீவிர சோதனை  நடத்தப்பட்டு வருகிறது. அப்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்த   MH04FA 3443  எண்ணுள்ள ஹோண்டா சிட்டி காரில் 6 சுற்று கைத்துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .

காவல்துறையினர் காரில் வந்தவரை விசாரணை நடத்தியபோது இவர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் சுதாகர் கணபத் எனத் தெரியவந்தது. கைத்துப்பாக்கி வைத்திருப்பதற்கான காரணங்களை போலீஸார் விசாரித்து வருகின்றனர். மாவோயிஸ்ட், அல்லது தீவிரவாத சக்திகள் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை சீர்குலைக்க ஏதேனும் திட்டமிட்டிருக்கிறார்களா என்கின்ற கோணத்திலும் பிடிபட்டவரிடம் விசாரித்து வருகின்றது திருப்பதி போலீஸ்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close