Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதுச்சேரி முன்னாள் முதல்வரை எதிர்த்துப் போட்டியிட்டவர் தற்கொலை...

புதுச்சேரி தொழிலதிபர்களில் ஒருவரும், பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகருமான தயாளன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி

கடந்த 2016-ம் ஆண்டு புதுச்சேரியில் நடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் போட்டியிட்டது. அதேபோல் என்.ஆர்.காங்கிரஸ் 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. அப்போது காமராஜர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டவர் முன்னாள் முதல்வரும் தற்போதைய சபாநாயகருமான வைத்திலிங்கம். என்.ஆர்.காங்கிரஸ் சார்பாக அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் தர்மாபுரியைச் சேர்ந்த தயாளன். அந்தத் தேர்தலில் வைத்திலிங்கம் வெற்றி பெற்ற நிலையில் தோல்வியைத் தழுவினார் தயாளன். தொழிலதிபரான இவர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்ததும் தயாளன் வீட்டுக்குச் சென்ற மேட்டுப்பாளையம் காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில் காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close