Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டாக்டர் வேஷம் போட்டு க்ளினிக் நடத்திய ஆசாமி - திருப்பூரில் கைது

டாக்டர் என்று கூறி பொதுமக்களிடம் மருத்துவம் பார்த்த நபரை திருப்பூர் காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

கைது

திருப்பூர் மாநகராட்சிப் பகுதிக்கு உட்பட்ட முருகம்பாளையம் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியாக க்ளினிக் வைத்து நடத்தி வந்திருக்கிறார் சோளி என்ற ஆசாமி. முருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இந்த நபரிடம் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர்  காய்ச்சல் காரணமாக சோளியின் க்ளினிக்குக்குச் சென்றுள்ளார்.

அவருக்கு ஊசி போட்ட சோளி, மருந்துச் சீட்டில் மாத்திரைகளும் எழுதித் தந்துள்ளார். ஆனால், சோளியின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த வாலிபர், பின்னர் திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அதன் அடிப்படையில் அந்த க்ளினிக்கில் சோதனை நடத்தியது காவல்துறை. அதில், மருத்துவர் என்று க்ளினிக் நடத்தி வந்த சோளி, கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், அங்கு பி.யூ.சி நர்சிங் கல்வியைப் படித்துவிட்டு, திருப்பூருக்கு வந்து தங்கி, ஆங்கில மருத்துவர் என்று கூறி க்ளினிக் நடத்தி வந்ததும் தெரியவந்திருக்கிறது. அதன் பின்னர் சோளியை கைதுசெய்த காவல்துறையினர், கோவை மத்தியச் சிறையில் அவரை அடைத்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close