Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மனநோயாளிகளைக் காப்பகத்தில் சேர்க்கும் இன்ஸ்பெக்டர்!

நாகர்கோவிலில் என்.ஜி.ஓ. காலனியில் சந்தேகப்படும்படி 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், திறத்திருக்கும் வீடுகளுக்குள் சென்று 'புலி வருது எல்லாரையும் காப்பற்றணும் கத்தி வேணும்' என்று கூறியுள்ளார். அதன்பின் அந்த பகுதி காம்பவுண்ட் சுவர்கள் மீது  ஏறி குதிப்பதுமாக  இருந்த இளைஞர், திருடனாக இருக்குமோ என அப்பகுதி எண்ணியுள்ளனர். உடனே அந்த இளைஞரைப் பிடித்து  மரத்தில் கட்டி வைத்து விசாரித்தனர். கன்னடமும், தமிழும் கலந்து அந்த இளைஞர் பேசியது மக்களுக்கு புரியவில்லை.

அதனைத் தொடர்ந்து  சுசீந்திரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் இளைஞரை போலீஸ் ஸ்டேஷன் கொண்டுபோய் விசாரித்து செல்லில் அடைத்து வைத்தனர். பின்னர் இன்ஸ்பெக்டர் சாம்சன், அந்த இளைஞரை விசாரிக்கும்போது அவர் பெயர் சிவா என்றும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது.

சாம்சன்

உடனே சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம்சன், பொற்றையடியில் உள்ள மனநல காப்பகமான மனோலயா இல்லத்துக்கு போன் செய்து மனநோயாளியான சிவாவை, மனோலயா இல்லத்தின் வாகனத்தில் அழைத்துச் சென்று சுத்தம்செய்து மனோலயா இல்லத்தின் புதிய உறுப்பினராக சேர்த்தார். இந்த செயலுக்காக  சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாம்சனை சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

இன்ஸ்பெக்டர்  சாம்சன் தொடர்ந்து சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். ஒருமுறை அடிபட்டுக் கிடந்த குற்றவாளிக்குக் கூட தனது ரத்தத்தைக் கொடுத்து காப்பாற்றியவர். சுசீந்திரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர் யாராவது சுற்றித் திரிந்தால், அவர்களை காப்பகத்தில் சேர்த்துவிடுகிறார். இதுவரை சாம்சன் நான்கு மனநல நோயாளிகளை மனோலயா மனநல காப்பகத்தில் சேர்த்துள்ளார். 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் களியக்காவிளையில் போக்குவரத்துக்கு இடையூராக இருந்த ஜெயலலிதா பேனரை அகற்றி தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திய இன்ஸ்பெக்டர் சாம்சன்தான். இந்த சமூக ஆர்வலர் சாம்சன்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close