Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கன்னியாகுமரியில் டெங்கு  முற்றிலும் கட்டுப்படுத்தப்படும்': கலெக்டர் தகவல்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. கடந்த மாதம் திடீரெனப் பெய்த மழை, சீதோஷ்ண நிலையை மாற்றியது. இதனால், மழை நீர் பல இடங்களில் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டது. சாக்கடைகளில் அதிக நீர் தேங்கியதால் டெங்கு கொசுக்கள்  பரவின. களியக்காவிளை தொடங்கி கன்னியாகுமரி வரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அதிகமானவர்கள் காய்ச்சலுக்காக  சிகிச்சை பெற்றுச்சென்றனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்களுக்கு, ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையிலும் தக்கலை மருத்துவமனையிலும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்  சஜ்ஜன் சிங் சவானிடம் பேசும்போது,  "டெங்கு காய்ச்சலால் குமரி மாவட்டம்  அதிகம் பாதிப்படைந்துள்ளது. அதற்குக் காரணம், இங்குள்ள காலநிலைதான். இதுபோன்று 2012-ம் ஆண்டிலும் காலநிலை மாற்றத்தால் குமரி மாவட்ட மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். குமரிக்கும், கேரள திருவனந்தபுரத்துக்கும் ஏறக்குறைய ஒரே காலநிலை இருப்பதும் ஒரு காரணம். திருவனந்தபுரத்தைக் காட்டிலும் குமரி மாவட்டத்தில் உயிர் இழப்புகள் குறைவு. இது, டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்காக அரசு மேற்கொண்ட வழிமுறைகள்தான்.

ஆனால், டெங்கு குறித்து தவறான தகவல்களும் வெளியாகின்றன. இது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்படுவோர் விவரமும் முறையாக கண்காணிக்கப்படுகிறது. நல்ல தண்ணீர் விநியோகிக்கும் அனைத்து சப்ளையர்களுக்கும்  பயிற்சியளிக்கிறோம். நகராட்சிக்குக் கீழ் இயங்கும் சுமார்  1,050 டொமஸ்டிக் வொர்க்கர்ஸ், ஒவ்வொரு குழுவாகப் பிரிந்து  வீடுவீடாகச்  சென்று  நீர் தேங்கும் இடங்களைக் கண்காணிக்கின்றனர். வீட்டுக்குள் கொசு  உருவாகக் காரணமாக அமையும் அனைத்து நீர் தேங்கும் இடங்களையும் அகற்றி வருவது மட்டுமல்லாமல், நிலவேம்புக் கசாயம் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. செய்திதாள்கள் மூலமும்  விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வீடுகளில் உள்ள மீன் தொட்டிகளில், கப்பி மீன்கள் வளர்க்க அறிவுறுத்துகிறோம். குமரி மாவட்டத்தில், ஆகஸ்ட் மாதம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும்" என அவர் தெரிவித்தார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close