Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குமரிக்கு கனரக ரப்பர் தொழிற்சாலை எப்போது வரும்?

கன்னியாகுமரி மாவட்டத்தில், தரமான ரப்பர் அதிக அளவு உற்பத்தியாகிறது. ஆனால், இதுவரை கனரக ரப்பர் தொழிற்சாலை அமைக்கப்படவில்லை. வேறு தொழில் வாய்ப்பு இல்லாத குமரி மாவட்டத்தில் ரப்பர் தொழிற்சாலை அமைந்தால், அதிகமானவர்கள் வேலைவாய்ப்பையும், விவசாயிகளுக்கு நல்ல பலனையும் கிடைக்கச் செய்வதோடு, மாவட்டமும் வளர்ச்சிபெறும். குமரி மாவட்டத்தில் விளவங்கோடு, கல்குளம், தோவாளை ஆகிய மூன்று வட்டங்களில், ரப்பர் சாகுபடி அதிகளவில் தொடங்கி 115 ஆண்டுகள் கடந்துள்ளது. 1992-ம் ஆண்டு, நாகர்கோவிலில் நடந்த அரசு விழாவில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, கன்னியாகுமரி மாவட்டத்தில் 400 கோடி செலவில் கனரக ரப்பர் தொழிற்சாலை அமைக்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த குமரி மாவட்ட மக்களுக்கும்  மகிழ்ச்சியைக் கொடுத்தது.

அதைத் தொடர்ந்து,  ரப்பர் தொழிற்சாலை அமைக்க செண்பகராமன்புதூர் பகுதியில் நிலம் தேர்வுசெய்யும் பணியும் தொடங்கியது. ஆனால், இந்த அறிவிப்பும் ஆரம்ப கட்டபணிகளுடன் சிறிது நாள்களில் முடங்கிப்போனது. பின்பு  தி.மு.க, அ.தி.மு.க. என ஆட்சிகள் மாறி மாறி வந்தன. ஆனால், கனரக ரப்பர் தொழிற்சாலைத் திட்டம் மட்டும் வரவில்லை.இந்நிலையில், 400 கோடியிலான கனரக ரப்பர் தொழிற்சாலைத்திட்டம் சுருங்கி, 210 கோடி ரூபாய் செலவில் ரப்பர் பூங்கா திட்டமாக தி.மு.க. ஆட்சியில் மாறியது. இதுவும் ரப்பர் வணிகத்தின் பங்களிப்போடு தொடங்கப்பட்டது. இதுவும் ஆரம்பகட்ட பணிகளுடன் முடங்கியது. தற்போது, கனரக ரப்பர் தொழிற்சாலைத்திட்டம், ரப்பர் பூங்கா திட்டம், ரப்பர் ஆராய்ச்சி மையத்திட்டம் போன்ற ரப்பர் சார்ந்த திட்டங்கள் அனைத்தும் கானல்நீராக மாறியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில், வெளி மாநிலங்களிலுள்ள தொழிற்சாலைகளுக்கு ரப்பர் செல்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் டயர், டியூப் உள்ளிட்ட பொருள்களைத் தயாரிக்கும் கனரக ரப்பர் தொழிற்சாலை அமைந்தால், ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, இங்கு உற்பத்தியாகும் ரப்பருக்கு அதிக விலையும் கிடைக்கும். அதோடு, அரசு வாகனங்கள் உள்பட, வாகனங்களுக்குத் தேவையான டயர், டியூப் போன்ற பொருள்கள் குறைந்த விலைக்குக் கிடைக்கும் நிலையும் ஏற்படும். கனரக ரப்பர் தொழிற்சாலை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. கனரக ரப்பர் தொழிற்சாலை எப்போது வரும் என்பதே குமரிமாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close