Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குஜராத் சட்டசபைத் தேர்தலில் ஒப்புகைச்சீட்டு முறை?

தேர்தல் ஆணையம்

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், ஒப்புகைச்சீட்டையும் கொண்டு, சோதனை அடிப்படையில் தேர்தல் நடத்த முடியும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குஜராத்தில் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை அறிந்துகொள்ளும் ஒப்புகைச் சீட்டுடன்கூடிய (VVPAT) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கோரி இருந்தது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் சார்பில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான அமர்வு முன்னிலையில், பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

வி.வி.பி.ஏ.டி மெஷின்கள், மின்னணு எந்திரங்களுடன் இணைக்கப்பட்டு, வாக்காளர்கள் தங்கள் வாக்கை யாருக்கு அளித்தோம் என்பதை அறிந்துகொள்ளும் சீட்டு வெளிவரும் வகையில் வாக்குப்பதிவு நடத்த இயலும் என்று அதில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக பலர் தாக்கல்செய்த மனுக்களின்படி, வி.வி.பி.ஏ.டி மெஷின்கள் தொடர்பான இதர விவரங்களை நீதிமன்றம் இன்று தொடர்ந்து விசாரிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தற்போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், குளறுபடிசெய்ய முடியாதவை என்று தேர்தல் ஆணையம் தரப்பில் எடுத்துக்கூறப்பட்டது. அதே நேரத்தில், குஜராத் சட்டசபைத் தேர்தலைப் பொறுத்தவரை, சுமார் 70 ஆயிரம் வி.வி.பி.ஏ.டி மெஷின்கள் தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனங்களிடம் இத்தகைய மெஷின்கள் வழங்க தேர்தல் ஆணையம் ஆர்டர் கொடுத்திருப்பதாகவும், செப்டம்பர் மாத இறுதிக்குள் அவை டெலிவரி செய்யப்பட்டுவிடும் என்றும் தேர்தல் ஆணையம் தனது மனுவில் கூறியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close