Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக மீனவர்கள் 12 பேர் கைது..! இலங்கைக் கடற்படை தொடர் அத்துமீறல்

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். 


இலங்கைக் கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை அந்நாட்டு கடற்படையினர் கைதுசெய்யும் சம்பவம், நீண்ட காலமாக நடைபெற்றுவருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, இருநாட்டு அரசும் கலந்துபேசி முடிவெடுத்துள்ள நிலையிலும் இந்தக் கைது நடவடிக்கை தொடர்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்தனர். மேலும், அவர்களது ஒன்பது விசைப்படகுகளையும் பறிமுதல்செய்தனர்.

இந்தச் சம்பவம், மீனவ மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் மீண்டும் கைது நடவடிக்கை நடைபெற்றுள்ளது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்தனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நாகதாஸ்க்கு சொந்தமான படகில் சென்ற ராஜா, களஞ்சியராஜ், சோலை, காமராஜ் ஆகியோரையும் பாண்டி என்பவருக்கு சொந்தமான படகில் அவருடன் சென்ற ஆரோக்கிய அந்தோணி, தாசன், செல்லையா ஆகியோரையும் ராமு என்பவரது படகில் அவருடன் சென்ற கார்மேகம், பலவேசம், முனியாண்டி ஆகிய 12 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

மேலும் கார்த்தி என்பவரது படகினை தங்கள் கப்பலைக் கொண்டு மோதி இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், அவர்களது மூன்று விசைப்படகுகளையும் பறிமுதல்செய்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close