Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போதை வாகன ஓட்டிகளின் உரிமங்கள் ரத்து - திருச்சி போலீஸ் கொடுத்த ஷாக்! 


குடிபோதையில் வாகனம் ஓட்டிய 380 பேரின் வாகனங்களைப் பறிமுதல் செய்ததோடு, அவர்களின் உரிமங்களை ரத்துசெய்ய திருச்சி மாநகரக் காவல் ஆணையர் உத்தரவிட்டு, திருச்சி குடிமகன்களுக்கு ஷாக்கொடுத்துள்ளார். 
 

திருச்சி போலீஸ்

திருச்சி மாநகரில் நடைபெறும் வாகன விபத்துக்களைத் தடுக்கும் விதமாவும், மது அருந்திவிட்டுஅதிவேகமாக வாகனத்தை ஓட்டுபவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கவும், ஓட்டுநர் உரிமங்களை ரத்துசெய்யவும் திருச்சி மாநகரக் காவல் ஆணையர் அருண், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அவர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். 

அதன்படி, கடந்த 2-ம் தேதி முதல் திருச்சி மாநகரம் முழுவதும் போலீஸார் நடத்திய வாகனத் தணிக்கையில், குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த 380 நபர்களைக் கண்டறிந்து, பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதன் பேரில், மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி, குடிபோதையில் இருந்த அவர்கள் மீது, குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 மேலும், அவர்கள் ஓட்டி வந்த 265-இரு சக்கர வாகனங்கள், 46-மூன்று சக்கர வாகனங்கள், 69 நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட மொத்தம் 380 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டன.  மேற்படி 380 நபர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில்,106 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்துசெய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றும், மேலும் நிலுவையிலுள்ள 274 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் களின் ஓட்டுநர் உரிமங்களை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்றும் திருச்சி மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் நபர்களின் மீது இதுபோன்ற வாகனத் தணிக்கை தொடர்ந்து நடைபெறும் என்றும், அவர்களது வாகனங்கள் பறிமுதல்செய்யப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close