Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’இனி உனக்கு நல்ல காலம்தான்’- தினகரனுக்கு மூக்குப்பொடி சாமியாரின் அருள்வாக்கு

திருவண்ணாமலையில் இருக்கும் மூக்குப்பொடி சுவாமியை தினகரன் நேற்று சந்தித்து ஆசி பெற்றுள்ளார். அ.தி.மு.க-வில் கடும் களேபரங்கள் நடந்துவருகின்றன. அ.தி.மு.க-வின்  அதிகாரத்தைக் கைப்பற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே கடும் மோதல் நிலவுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியின் ஆலோசனையின் பேரில் செயல்பட்டுவருகின்றனர். சசிகலா அறிவுரையின்படி தினகரன் செயல்படுகிறார். 

ttv dinakaran
 

தினகரன் மீது நடவடிக்கை எடுப்பதுகுறித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ராயப்பேட்டை கட்சித் தலைமை அலுவலகத்தில் இரண்டாவது முறையாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில், தினகரன் விவகாரம்குறித்து எதுவும் பேசப்படவில்லை. அணிகள் இணைப்புகுறித்து விவாதிக்கப்பட்டதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார். 

ttv dinakaran
 

இன்று நடக்கும் கூட்டத்தில் சசிகலா, தினகரன் விவகாரம்குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், தினகரன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள், திருவண்ணாமலைக்குச் சென்றனர். அங்கு, மூக்குப்பொடி சுவாமியைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர். அப்போது மூக்குப்பொடி சுவாமிகள், 'இனி உனக்கு நல்ல காலம்தான்' என்று சொன்னதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். அந்த மகிழ்ச்சியில், தினகரன் நேற்றிரவு சென்னைக்குப் புறப்பட்டுவந்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close