Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீவிர ஆலோசனையில் ஓ.பன்னீர்செல்வம்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், தினகரனுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது, தினகரனின் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

o.paneerselvam
 

இந்தச் சூழ்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம், கிரீன்வேஸ் சாலையில் நடந்தது. அதில், நம்முடைய தர்மயுத்தம் வெற்றிபெற்றுள்ளது. ’சசிகலா குடும்பத்தினரை நீக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவுசெய்து தீர்மானம் நிறைவேற்றியதை வரவேற்கிறோம். அடுத்து, அணிகள் இணைப்புகுறித்து பேசி முடிவெடுக்கலாம்’ என்று ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. 

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பேசிய மூத்த நிர்வாகி ஒருவர், ''சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி விவகாரம் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவுக்குப் பிறகே, பொதுச் செயலாளர் பதவிகுறித்து பேச முடியும். சசிகலாவால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச் செயலாளர் தினகரன், தன்னிச்சையாகக் கட்சி நிர்வாகிகள் பட்டியல் வெளியிட்டது சட்ட விரோதமானது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அவர்கள் நிறைவேற்றிய தீர்மானம்குறித்து எங்களது ஆலோசனைக் கூட்டத்தில் விவாதித்தோம்.

எங்களின் கோரிக்கைகளை முழுமையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு நிறைவேற்றினால், உடனடியாக இணைப்புகுறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று ஆலோசனைக் கூட்டத்தில் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் தெரிவித்தனர். தொடர்ந்து, கூட்டம் நடந்துகொண்டு இருக்கிறது. இதுவரை நடந்த ஆலோசனையில், இணைப்புக்கு கிரீன் சிக்னல் கொடுக்க அனைவரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். விரைவில் அணிகள் இணையும் என்று நாங்களும் நம்புகிறோம்’’ என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close