Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கொத்தடிமை முறையை ஒழிக்க விழிப்பு உணர்வு!

கலெக்டர்

காலங்கள் எங்கே போனாலும் சிலரது வாழ்கை முறை பின்னோக்கியே தள்ளப்பட்டுவருகிறது. வறுமையில் வாழும் ஏழை, எளியவர்களைச் சில முதலாளிகள் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அவர்களைக் கொத்தடிமைகளாக மாற்றி சித்ரவதை செய்கின்றனர். அதை முழுமையாக ஒழிக்க ஐ.ஜெ.எம் என்ற அமைப்பு அரசுடன் இணைந்து அரசு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு விழிப்பு உணர்வு நடத்திவருகிறது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்பு உணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்த வந்த ஊழியர்களிடம் பேசினோம். ''கொத்தடிமைகளை மீட்பதில் காவல்துறை அதிகாரிகளைவிட ஆர்.டி.ஓ உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்குதான் முழு உரிமை உண்டு. எனவே, அந்த அரசு அதிகாரிகளுக்கு எப்படி கொத்தடிமைகளை அடையாளம் காணுவது, அவர்களை எப்படி மீட்பது, அதைத் தொடர்ந்து அவர்களைப் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றி அரசு சலுகைகளை வழங்குவது என்பதைப் பற்றி விளக்கிவருகிறோம். தமிழகத்தில் மொத்தம்
11 இடங்களில் இந்த விழிப்பு உணர்வு நிகழ்வை நடத்த உள்ளோம். அதற்காக ஆவணங்கள் எல்லாம் தயாரித்து அதிகாரிகளிடம் கொடுத்துவிடுவோம். மேலும், எங்களோடு மீட்க்கப்பட்ட கொத்தடிமைகளை அழைத்துவந்துள்ளோம் அவர்கள் வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்பதை விளக்க கொத்தடிமைகள் மாதிரி வீடுகளும் செய்து வைத்து வாகனங்கள் மூலம் ஒவ்வொர் இடங்களுக்கும் கொண்டு செல்கிறோம்'' என்றார் .

 

மேலும் கொத்தடிமை முறையிலிருந்து மீட்கப்பட்ட முருகன் என்பவரிடம் பேசினோம்,  ''எனது சொந்த ஊர் திருவண்ணாமலை. எங்கள் வீட்டில் 50 ரூபாய் பணம்கூட இல்லாத சூழல் இருந்தது. அந்தச் சமயத்தில் சிலர் 2,000 ரூபாய் கொடுத்து வேலைக்கு அழைத்து சென்றனர்.

சென்னை தாம்பரம் பகுதியில் வேலை பார்த்தேன். பல மாதங்கள் கடந்தும் சம்பளம் இல்லாமல் என்னை வாட்டி எடுத்தார்கள்; திரும்பக்  கேட்டால் அடிப்பார்கள். வீட்டுக்குப் போன்கூட செய்ய முடியாது . 4வருடங்களாக நான் எங்கேயும் போகமுடியாமல் அவர்களிடம் வேலை பார்த்தேன், சாப்பாடு மட்டும்தான் போட்டுள்ளார்கள். கேட்டால் உனக்கு  2,000 ரூபாய் கொடுத்துள்ளோம் அது உனக்குப் போதும் என்று சொல்லிவிடுவார்கள். பிறகு, அரசு அதிகாரிகள் எங்களை மீட்டு 20,000 பணம் வழங்கி எங்களை வீட்டில் பத்திரப்படுத்தியுள்ளார்கள். தற்போது எனது பெயரில் 1 லட்சம் ரூபாய் டெப்பாசிட் செய்துள்ளார்கள். எங்களைப்போல் இனி யாரும் ஏமாறக்கூடாது என்பதற்காக தற்போது நானும் விழிப்பு உணர்வு களத்தில் இறங்கியுள்ளேன்'' என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close