Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை!

கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கார்த்தி சிதம்பரம்

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சிக்கியுள்ள கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்பிருப்பதாகக் கூறி, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. அவர் உள்ளிட்ட 4 பேர் தேடப்படும் நபராக உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தனர். இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசியல் காரணங்களுக்காக லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக கார்த்தி சிதம்பரம் தரப்பில் வாதிடப்பட்டது. இம்மாத இறுதியில் வெளிநாடு செல்ல வேண்டி இருப்பதால் லுக் அவுட் நோட்டீஸுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. கார்த்தி சிதம்பரம் தரப்பு வாதத்தை ஏற்ற நீதிமன்றம், அவர் மீதான லுக் அவுட் நோட்டீஸுக்கு செப்டம்பர் 4-ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து, அன்றைய தினத்துக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. இதுதொடர்பாகp பதிலளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.   

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close