Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக அரசின் 85% இடஒதுக்கீட்டு அரசாணை வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

மருத்துவப் படிப்புகளில் 85 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை, அவசர வழக்காக நாளை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.  


நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்றவர்களில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத உள் இடஒதுக்கீடும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த  மாணவர்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீடும் அளிக்கும் வகையில் அரசாணை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டது. இதை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி அமர்வு மற்றும்  இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஆகியவை தமிழக அரசின் இடஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.  இந்த கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காகக் கருதி நாளை விசாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.  
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close