Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தினகரன் பேச்சுக்கு பன்னீர்செல்வத்தின் பதில்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டையில் இருக்கும் அ.தி.மு.க-வின் தலைமையகத்தில் நடைபெற்ற அ.தி.மு.க அம்மா அணியின் கூட்டத்தில், 'தினகரனின் அறிவிப்புகள் கட்சியை எந்தவிதத்திலும்  கட்டுப்படுத்தாது' என்று அதிரடியாக அறிவித்தார். இதையடுத்து தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், 'கட்சியின் பெயரைத் தவறாகக் குறிப்பிட்டுள்ளதால் முதலமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமி இழக்க நேரிடும்' என்று எச்சரிக்கை விடுத்தார்.

ஓ.பன்னீர்செல்வம்

அவர் மேலும், 'சசிகலாவால் முதலமைச்சராக நியமிக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. அதேபோல், துணைப் பொதுச் செயலாளராக என்னை நியமித்தவர் பொதுச் செயலாளர் சசிகலா. ஆகவே, துணைப் பொதுச் செயலாளராக நான் செயல்பட எந்தவிதத் தடையும் இல்லை. கட்சியின் விதிகளுக்குட்பட்டுதான் துணைப் பொதுச் செயலாளராக என்னை சசிகலா நியமித்தார். சசிகலாவால் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசனின் நியமனத்தை ஏற்றுக்கொள்ளும் இவர்களால், துணைப் பொதுச்செயலாளராக எனது நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாதா?' என்றும் கேள்வி எழுப்பினார். இப்படி அ.தி.மு.க-வுக்குள் உட்கட்சி குழப்பம் உச்சத்தைத் தொட்டிருக்கும் நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 'தமிழக அரசியலில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றத்தை கூர்ந்து கவனித்து வருகிறோம். மக்கள், தொண்டர்களின் விருப்பப்படி விரைவில் நல்ல முடிவு எடுப்போம்' என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close