Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

”புதுச்சேரியில் விரைவில் பா.ஜ.க ஆட்சி”- சாமிநாதன் பேச்சு

”தற்போது இருக்கும் காங்கிரஸ் ஆட்சி மாறி புதுச்சேரியில் விரைவில் பா.ஜ.க-வின் ஆட்சி மலரும்” என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

பாஜக

புதுச்சேரி பா.ஜ.க-வின் மாவட்ட செயற்குழு கூட்டம் வில்லியனூரை அடுத்த மதகடிப்பட்டில் நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட பா.ஜ.க மாநிலத் தலைவரும் நியமன எம்.எல்.ஏ-க்களில் ஒருவருமான சாமிநாதன், “நமது தேசியத் தலைவர் அமித் ஷாவின் புதுச்சேரி வருகைக்குப் பிறகு பல மாற்றங்கள் நிகழும். முக்கியமாகத் தற்போது இருக்கும் ஆட்சி மாறி புதுச்சேரியில் பா.ஜ.க-வின் ஆட்சி மலரும். நம் பாரதப் பிரதமர் மோடியின் அனைத்து மக்கள் நலத் திட்டங்களையும் கிராமங்கள்தோறும் சென்று சேர்ப்பதுதான் புதுச்சேரி பா.ஜ.க-வின் முதல் சேவை. தற்போது இருக்கும் காங்கிரஸ் அரசு பதவி வெறியில் செயல்பட்டு வருகிறது. அதனால் மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் பல முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. நம் மாநிலத்தில் நிகழவிருக்கும் மிகப் பெரிய ஆட்சி மாற்றத்துக்காக பா.ஜ.க தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும்” என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close