Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தண்ணீர் குடிக்க வந்து உயிர் விடும் மான்கள்!

தண்ணீர் குடிக்க ஊருக்குள் வரும் மான்கள் செத்துப் போகும் கொடுமை மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை பகுதியில் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து இடம் பெயர்ந்து வந்த மான்கள் கூட்டம் சிவரக்கோட்டை அருகிலுள்ள காட்டுக்குள் தங்கிவிட்டன. தண்ணீர் தேடி ஊருக்குள் மான்கள் வருவதும் ஊர்க்காரர்கள் தண்ணீர் கொடுத்து  திரும்ப காட்டுக்குள் விடுவதும் தொடர்ந்து வந்தன. இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஒரு கும்பல் மான்களை வேட்டையாட ஆரம்பித்தது. அதிகாரிகளிடம் புகார் செய்தபின், வேட்டைக்காரர்கள் சில மாதங்களுக்கு முன்பு கைதுசெய்யப்பட்டார்கள்.


 

இந்த நிலையில், மீண்டும் மான்கள் சிவரக்கோட்டையைச் சுற்றியுள்ள ஊருணிகளில் தண்ணீருக்காக வந்துகொண்டிருக்கின்றன. அப்படி வரும்போது சில மான்கள் காயத்துடன் வந்து இறந்து விடுகின்றன. இது மட்டுமல்லாமல், மான்கள் காட்டுக்குள் செத்துக் கிடப்பதையும் மக்கள் பார்த்துள்ளனர். சிறுத்தையின் காலடித்தடம் தெரிவதால் மான்கள் துரத்தப்பட்டு ஊருக்குள் வருகிறதோ என்று  மக்கள் அச்சப்படுகிறார்கள். மானை துரத்தி வரும் சிறுத்தை கிராமத்துக்குள் நுழைந்துவிட்டால் என்ன செய்வது என்று அச்சத்துடன் இருக்கிறார்கள்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close