Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனுமதியின்றி செயல்பட்ட நீச்சல் குளத்தை மூட மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 

காரைக்குடியில் அனுமதியின்றி செயல்படும்  நீச்சல் குளத்தை மூட மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர் செண்பகமூர்த்தி. இவர் அனுமதியின்றி நீச்சல் குளம் நடத்தி வந்தார். இந்த நீச்சல்  குளத்தில் எந்தப் பாதுகாப்பு வசதியும் கிடையாது. சொந்தப் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட நீச்சல் குளத்தை வணிக ரீதியாகப் பயன்படுத்த ஆரம்பித்தார் செண்பகமூர்த்தி. ஒரு மணி நேரத்துக்கு ரூ.50 என வசூல்செய்து சிறுவர்களைக் குளிக்க அனுமதித்தார்  இவர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த நீச்சல் குளத்தில் குளிக்கச்சென்ற முகில்திலீபன் என்ற மாணவன் உயிரிழந்தார்.

   

 

இது தொடர்பாக அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 'தமிழகத்தில் நீச்சல் குளம் வரைமுறை சட்ட விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும். அரசு அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக இயங்கி வரும் நீச்சல் குளங்களை மூட வேண்டும்' என்று தமிழர் தேசிய முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் இளமாறன் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை இன்று  நீதிபதிகள் சசிதரன் மற்றும் சுவாமிநாதன் முன்பு வந்தது. அப்போது நீதிபதிகள், “நீச்சல்குளத்தின் உரிமையாளர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி முறையான அனுமதி பெற்ற ஆவணங்களை 15 நாள்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

 

தவறும் பட்சத்தில் காரைக்குடியிலுள்ள நீச்சல்குளங்களை மூட உத்தரவிடுகிறோம்'' என்றனர். இதையடுத்து, அவர் அனுமதியின்றி நீச்சல் குளம் நடத்தி வந்தது தெரிந்தது. பின்னர், செண்பகமூர்த்தியை நீண்ட இடைவெளிக்குப் பிறகு காரைக்குடி அழகப்பாபுரம் போலீஸார் கைதுசெய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close