Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குடற்புழு மாத்திரைகள் குமரியில் 5 லட்சம் பேருக்கு விநியோகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளரும் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கும் முகாம்  நடைபெற்றது. நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் முகாமை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவான் தொடங்கிவைத்தார்.  குமரி மாவட்டம் முழுவதும் 5  லட்சத்து 90 ஆயிரம் குழந்தைகளுக்கு மாத்திரைகள் வழங்கப்படுகிறது. வளரும் குழந்தைகளுக்கு குடற்புழு இருந்தால் உடல் வளர்ச்சி குறைபாடு, ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இந்த குறைபாடுகளை களைவதற்காக  சுகாதாரத் துறை சார்பில் வருடத்துக்கு இரண்டு முறை  குடற்புழு நீக்கும் மாத்திரைகள்  ஒரு வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இந்த ஆண்டு இரண்டாவது கட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள், ஊட்டச்சத்து மையங்களில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவான் தொடங்கி வைத்தார். இதில் பொது சுகாதார துறை இணை இயக்குநர் டாக்டர் மதுசூதனன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மாவட்டம் முழுவதும் 5 லட்சம் 90 ஆயிரம் குழந்தைகளுக்கு மாத்திரைகள் வழங்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்போது மாத்திரைகள் வாங்க முடியாதவர்கள் வரும் 17-ம் தேதி நடைபெறும் முகாமின் மூலம் மாத்திரைகள் பெற்றுக் கொள்ளலாம் என பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close