Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெங்கு காய்ச்சலுக்கு மளிகை வியாபாரி மரணம்...!

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகில் மளிகைக் கடை வியாபாரி ஒருவர் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்திருக்கிறார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த மணிகண்டன் என்ற நபர் அதே பகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த 10 நாள்களுக்கும் மேலாக காய்ச்சலில் பாதிக்கப்பட்டு இருந்த மணிகண்டனை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர் அவரது குடும்பத்தினர். ஆனால், காய்ச்சலின் பாதிப்பு குறையாமல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்ததால், மணிகண்டனை உடனடியாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சையளித்து வந்துள்ளனர். கடந்த இரண்டு நாள்களாக அங்கு மணிகண்டனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,  சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையிலேயே மணிகண்டன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் மற்றும் கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தமிழக சுகாதாரத் துறை எப்போதுதான் கண் விழிக்குமோ..

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close