Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கடத்தல் வழக்கில் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை ! அதிரடி உத்தரவு

மதுரை முனிச்சாலை பகுதியில் மருந்துகள் மொத்த வியாபாரம் செய்துவந்தார் தொழிலதிபர்  ஜனார்த்தனன். இந்நிலையில் 2015-ம் ஆண்டு அவரது வீட்டில் தச்சுவேலை செய்த சசிக்குமார் உள்பட சிலர்  ஜனார்த்தனன் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதைப் பார்த்தனர். அதைத் தொடர்ந்து ஜனார்த்தனின் பணத்தை எப்படியாவது சூறையாடவேண்டும் என்று பல திட்டங்களை தீட்டினர் . பல கட்ட முயற்சிகள் தோற்றுப் போன நிலையில், கடைசியாக ஜனார்த்தனனை கடத்தி மிரட்டல் செய்துவிடலாம் என்று திட்டம் தீட்டி கடத்தல்காரர்களையும் தயார் செய்தனர். 

தீர்ப்பு

இதையடுத்து, மது அருந்திவிட்டு மதுரை ஜீவாநகர் சசிகுமார், கணேசன், பிரபல ரெளடியின் மகன் புஷ்பராஜ், சுந்தராஜபுரம் முத்து, மணிநகரம் அருண்கண்ணு, தேனி முனியாண்டி,  எம்.கணேசன் ஆகிய ஏழு பேரும் சேர்ந்து கடந்த 2015 ஏப்ரல் 12-ம் அன்று ஜனார்த்தனை காரில் கடத்தி மேலூரை அடுத்த கருவேல் மரங்கள் நிறைந்த  காட்டுக்குள் கொண்டுசென்றனர். அங்கிருந்து ஜனார்த்தனனின் மனைவிக்கு போனில் பேசி ரூ.1 கோடி பணம் கேட்டுள்ளனர். அவ்வாறு பணம் தராவிட்டால் ஜனார்த்தனை கழுத்தை அறுத்து கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

இதனால் பதறிப்போன ஜனார்த்தனின் மனைவி  சாந்தி ரூ.15 லட்சத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார் . ஆனால், பாக்கிப் பணத்தை கொடுத்தால்தான் விடுவோம் என்று எச்சரித்துள்ளனர்.  பின்னர் இந்த சம்பவம் குறித்து அவர் தெப்பக்குளம் போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் தனிப்படை அமைத்து கடத்தல்காரர்களை கைதுசெய்து தொழிலதிபர் ஜனார்த்தனையும் மீட்டனர். 

இந்த வழக்கு மதுரை 4-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது . இதில் கைதான ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சி.சஞ்சய்பாபா தீர்ப்பளித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close