Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாடைக் கட்டி ஆர்ப்பாட்டம் செய்த குமரி பா.ஜ.க-வினர் கைது!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நகர பகுதிகளில் பழுதடைந்து உள்ள மாநில சாலைகளை உடனடியாக செப்பனிட வலியுறுத்தி வடசேரி சந்திப்பில் பா.ஜ.க-வினர் சாலைகளுக்குப் பாடை கட்டி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க-வினர் 21 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நகராட்சியில் மொத்தம்  52 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 4 ஆண்டுகளுக்கு முன் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன. பல இடங்களில்  பணிகள் முடிவடைந்தும் சாலைகளை சீரமைக்காமல் குண்டும் குழியுமாக உள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்நிலையில், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சாலைகளை செப்பனிட வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நாகர்கோவிலில் நடைபெற்று  வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நாகர்கோவிலின் மையப்பகுதியான வடசேரியில்  நகர பா.ஜ.க சார்பில் சாலைகளுக்கு பாடை கட்டி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பழுதாகி உள்ள சாலைகளை உடனடியாக செப்பனிட மாநில அரசை வலியுறுத்தி கோஷமிட்டனர். அதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க-வினர் 21 பேரை போலீசார் கைதுசெய்தனர். கடந்த 5 ஆண்டுகள் நாகர்கோவில் நகராட்சி பா.ஜ.க வசம்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close