Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீண்ட நாள்களுக்குப் பிறகு குமரியில் மழை 

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில்  பரவலாக மழை பெய்து வருகிறது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காலநிலை நிலவுவதால் குமரிமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், கடந்த காலங்களில்  பருவமழைகளை தொடர்ந்து பெற்று வந்தது. இதனால் மாவட்டத்தில் விவசாயமும் செழித்தது. ஆனால், கடந்த ஆண்டு முதல் பருவமழைகள் குமரியில் பெய்யவில்லை. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் நீர் இல்லாமல் தவித்து வந்தனர். மழை பெய்யாததால் குமரியின் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை  பெருஞ்சாணி, சிற்றாறு ஆகிய அணைகளின் நீர்மட்டம் குறைந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவி வருகிறது.

இதனால், பாசன குளங்களும் வறண்டு காணப்படுகின்றன. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளிலும் நீர் மட்டம் குறைவாக உள்ளது. கடந்த சில நாள்களாக குமரிமாவட்ட மலையோர கிராமப் பகுதிகளில் மழை பெய்ததைத் தொடர்ந்து அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்தது. வழக்கமாக கன்னிப்பூ சாகுப்படிக்காக பேச்சிப்பாறை அணை ஜூன் 1-ம் தேதி அரசால் திறக்கப்படும். அணைகளில் போதிய நீர் இல்லாமல் இருந்தாலும் கன்னிப்பூ சாகுப்படிக்காக பேச்சிப்பாறை அணை கடந்த 21-ம் தேதி திறக்கப்பட்டது. அணையில் இருந்து, தற்போது கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அணையின் நீர் மட்டம் குறைந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவ மழை எதிர்பார்த்தது அளவுக்கு பெய்யாததால் முக்கிய அணைகள் மற்றும் குளங்களில் நீரின் இருப்பு கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில், திடீரென பெய்துகொண்டிருக்கும் மழையால் நாகர்கோவில், தோவாளை, ஆரல்வாய்மொழி, கொட்டாரம், கன்னியாகுமரி  உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து  பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். பெரும் மழையால் முக்கிய அணைகளின் நீர்வரத்து அதிகரிக்கும் என விவசாயிகள் நம்பிக்கையில் உள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close