Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த தொடர் விபத்து: மீட்கச் சென்ற ஆம்புலன்ஸும் விபத்தில் சிக்கிய சோகம்!

திருப்பூரில் வாகன விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கச் சென்ற 108 ஆம்புலன்ஸும் லாரி மோதி விபத்தில் சிக்கியிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் இருந்து நேற்று காலை கிளம்பிய கார் ஒன்று கோவை நோக்கி வந்துகொண்டு இருந்திருக்கிறது. சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெருமாநல்லூர் காளிபாளையம் பிரிவு என்ற இடத்தை கடக்கும் தருவாயில் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், பாதை மாறி எதிர்திசையில் வாகனங்கள் வரும் சாலைக்கு சென்றிருக்கிறது. அப்போது எதிர்திசையில் ஈரோடு நோக்கி சென்றுகொண்டு இருந்த வேன் ஒன்று பாதை மாறி வந்த காரின் மீது வேகமாக மோதியதால் விபத்து நேர்ந்திருக்கிறது. இந்த சம்பவத்தில் திசை மாறி வந்த காரை ஓட்டிய ஆனந்தகுமார் மற்றும் காரில் பயணித்த மேலும் இருவரும் காயம் அடைந்தனர். அந்த காரின் மீது மோதிய வேனின் ஓட்டுநர் நடராஜன் என்பவரும் காயம் அடைந்தார்.

தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்து பற்றி உடனடியாக அவசர எண் 108- க்கு தகவல் தெரிவித்தனர் அப்பகுதியில் இருந்தவர்கள். அதன் பின்னர் 108 - ஆம்புலன்ஸ் வாகனம் விபத்து நடைபெற்ற இடத்துக்கு வந்தடைந்து, அதன் பணியாளர்கள் விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியே வந்த சரக்கு லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நேராக சாலையில் நின்றுகொண்டு இருந்த ஆம்புலன்ஸ் மீது மிகக் கடுமையாக மோதியது. இதனால் ஆம்புலன்ஸின் பின் பக்கம் நொறுங்கி, அதன் ஓட்டுநர் தங்கதுரை மற்றும் மருத்துவ உதவியாளர் கோவிணன் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூர் மாவட்ட காவல்துறையினர், விபத்தில் சிக்கி தவித்துக்கொண்டு இருந்த 6 பேரையும் மீட்டு கோவை மற்றும் திருப்பூர் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர்.

அடுத்தடுத்து நடந்த தொடர் விபத்துகள் குறித்து திருப்பூர் காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close