Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விதிகளை மீறி  கட்டடம் : திருச்சி ரத்னா ஸ்டோர்ஸ் கட்டடத்துக்குச் சீல் வைக்க உத்தரவு!


திருச்சி ரத்னா ஸ்டோர்ஸ் கட்டடம், உரிய அனுமதியின்றி கட்டப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை  சீல் வைக்க உத்தரவிட்டுள்ளது. இது திருச்சி வணிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருச்சி ரத்னா ஸ்டோர்ஸ்

திருச்சி, மலைக்கோட்டை மற்றும் பெரியக்கடைவீதி, திருச்சி என்.எஸ்.பி. சாலையில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரு வணிக நிறுவனங்களுக்குப் பல மாவட்டங்களில் இருந்து மக்கள் படையெடுப்பது வழக்கம். அதனால், சென்னையைச் சேர்ந்த வணிக நிறுவனங்கள் திருச்சியை நோக்கி நகர்கின்றன. இந்நிலையில், திருச்சி என்.எஸ்.பி. சாலையில் ரத்னா ஸ்டோர்ஸ் நான்கு மாடிக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்தக் கட்டடம் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆயிஷாபேகம் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். 

அந்த வழக்கின் மனுவில், "ரத்னா ஸ்டோர்ஸ் நிறுவனம், இரண்டு அடுக்கு கட்டடம் கட்டுவதற்கு மட்டும் அனுமதி பெற்றுவிட்டு,  நான்கு மாடிக் கட்டடத்தை கட்டியுள்ளது" என்று ஆயிஷாபேகம் குற்றம் சாட்டியிருந்தார். 

இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "அரசின்  உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் ரத்னா ஸ்டோர்ஸ் கட்டடம் கட்டப்பட்டுள்ளது, அந்த நிறுவனத்தின் இரண்டு மாடியைத் தவிர, அதற்கு மேல் உள்ள கட்டடங்களுக்கு சீல் வைக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close