Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பு: வனத்துறையினர் மீட்டனர்!

கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் அருகே, வீட்டின் காம்பவுண்டுக்குள் நுழைந்த 12 அடி நீளமும், 10 கிலோ எடையும் கொண்ட மலைப்பாம்பை உயிருடன் பிடித்து, கீரிப்பறை அருகே உள்ள வனப் பகுதியில் கொண்டுபோய் விட்டனர். 

குமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் பகுதியில் ஏராளமான மலைகள் உள்ளன. இந்த மலைகளிலிருந்து அடிக்கடி இரைதேடி மலைப்பாம்புகள் கிராமங்களுக்குள் வருவது வழக்கம். அப்படி வரும் பாம்புகள் ஆடு, கோழிகளைத் தின்றுவிடும். இதனால், கிராம மக்கள் எப்போதும் முன் எச்சரிக்கையாக இருந்துவருகின்றனர்.

இந்நிலையில், இந்திரா காலனியில் உள்ள  தொழிலாளி பரமசிவம் என்பவர், தனது வீட்டின் காம்பவுண்டுக்குள் ஆடு, மாடு உள்ளிட்டவை  உள்ளே வராமல் இருப்பதற்காக, மீன் வலை ஒன்றை பாதுகாப்பிற்காகக் கட்டிவைத்துள்ளார். அந்த மீன் வலைக்குள், மலைப்பாம்பு ஒன்று சிக்கி இருப்பதைக் கண்ட அவர், பூதப்பாண்டி வனச் சரகத்துக்குத் தகவல் கொடுத்தார். உடனே  ஆரல்வாய்மொழி வனத்துறைக் காவலர்கள் விரைந்துவந்து மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனர். பிடிப்பட்ட மலைப்பாம்பு, சுமார் 12 அடி நீளமும் 10 கிலோ எடையும் கொண்டது. உடனடியாக அதை, கீரிப்பறை அருகே உள்ள வனப் பகுதியில் கொண்டுபோய் விட்டனர். குமரியின் மலையோரப் பகுதிகளில் தொடர்ந்து வன விலங்குகள் கிராமங்களுக்குள் வருவது, மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close