Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தமிழகம் விடுபடும்': முதல்வர் முடிவுகுறித்து ஹெச். ராஜா கருத்து!

'கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக தினகரன் நியமனம் சட்டவிதிகளின்படி செல்லாது' என்ற முதல்வரின் அறிவிப்புகுறித்து பா.ஜ.க-வின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா கருத்து தெரிவித்துள்ளார். 

ஹெச்.ராஜா

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டையில் இருக்கும் அ.தி.மு.க தலைமையகத்தில் நடைபெற்ற அ.தி.மு.க அம்மா அணியின் கூட்டத்தில், 'தினகரனின் அறிவிப்புகள் கட்சியை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது' என்று அதிரடியாக அறிவித்தார்.  அதேபோல, ஜெயலலிதாதான் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மேலும், ஓ. பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்த முடிவு, தினகரன் அணி தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், இதுகுறித்து பா.ஜ.க-வின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், "சசிகலா மற்றும் தினகரன் அ.தி.மு.க-விலிருந்து முதல்வரால் நீக்கம். தமிழகம், திருக்குவளை மற்றும் மன்னார்குடி குடும்பங்களிடமிருந்து விடுபடும்" என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close