Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வனத்துறையினரின் தூக்கத்தைக் கெடுத்த சிறுத்தை! விடியவிடிய தீப்பந்தத்துடன் இருக்கும் மக்கள்

சிறுத்தை

நெல்லை மாவட்டம் கடையம் பகுதியில், சிறுத்தையின் அச்சுறுத்தல் காரணமாக கிராம மக்கள் விடிய விடியத் தூங்காமல் தீப்பந்தம் ஏந்தியபடி காவல் இருந்துவருகின்றனர். 

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்திலிருக்கிறது, பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமம். நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள இந்தக் கிராமத்தில், அடிக்கடி சிறுத்தை நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்திவருகிறது. குடியிருப்புக்குள் புகுந்து, வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடுகளையும் நாயையும் அடித்துத் தூக்கிச்சென்றுவிடுவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

இந்தப் பகுதியில், பொதுமக்களைப் பயமுறுத்திய 5 சிறுத்தைகளை வனத்துறையினர் கூண்டுவைத்துப் பிடித்தனர். ஆனாலும், இந்தப் பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் குறையவில்லை. அடிக்கடி இந்தக் கிராமத்துக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்திவருகிறது. கடந்த இரு மாதங்களாக தலைகாட்டாமல் இருந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக பொதுமக்களை அச்சுறுத்திவருகிறது. அடிக்கடி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்திருக்கிறார்கள். 

வனத்துறை

சிறுத்தையை காட்டுப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுவருகிறார்கள். இந்தப் பகுதியில், இரவு நேரத்தில் வனத்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடக்கத்தில், நாய் மற்றும் ஆட்டைக் கவ்விச் சென்ற சிறுத்தை தற்போது அமைதிகாத்துவந்த போதிலும், கிராமத்தைச் சுற்றிய பகுதியிலேயே பதுங்கி இருக்கிறது. அதன் நடமாட்டத்தை பொதுமக்கள் பார்த்தபோதிலும், இதுவரையிலும் அதன் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது.

சிறுத்தை இரவு நேரத்தில் ஊருக்குள் நுழைந்துவிடக்கூடாது என்பதற்காக, கிராமத்தினர் இரவு முழுவதும் தீப்பந்தங்களை ஏந்தியபடி காவல் இருந்துவருகிறார்கள். வனத்துறையினரும் டார்ச் லைட்டுகளுடன் இரவில் அந்தப் பகுதியைக் கண்காணித்துவருகின்றனர். சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close