Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பீகாரில் மாவட்டக் கலெக்டர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

பீகாரில் புக்ஸார் மாவட்ட ஆட்சியர் முகேஷ் பாண்டே (வயது 32) ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

மாவட்ட ஆட்சியர் தற்கொலை

காஸியாபாத் ரயில் நிலையத்தில் சிதைந்துபோய் கிடந்த அவரின் உடலை போலீஸார் கைப்பற்றினர். 2012-ம் ஆண்டு பேட்ஜைச் சேர்ந்த இவர், ஆகஸ்ட் 4-ம் தேதிதான் புக்ஸார் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றிருக்கிறார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. ரயிலில் பாய்வதற்கு முன், டெல்லி லீலா பேலஸ் ஹோட்டலில் இருந்து அவருக்கு போன் வந்திருக்கிறது. அவரின் சட்டைப் பையில் இருந்து லீலா பேலஸ் ஹோட்டலின் விசிட்டிங் கார்டும் கடிதம் ஒன்றும் கிடைத்துள்ளது. லீலா பேலஸ் ஹோட்டலில் இருந்து போன் வந்த பிறகே, முகேஷ் பாண்டே தற்கொலை முடிவு எடுத்திருக்க வேண்டுமென போலீஸார் சந்தேகிக்கின்றனர். 

முகேஷ் பாண்டே எழுதிய கடிதத்தில், 'சொந்த விருப்பத்தின் பேரில் தற்கொலை செய்துகொள்கிறேன். என் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவும்' என்று எழுதப்பப்பட்டுள்ளது. வேறு எந்தக் காரணமும் குறிப்பிடப்படவில்லை. துணை ஆட்சியர் நிலையில் இருந்த அவர் ஜூலை 31-ம் தேதிதான் புக்ஸார் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். தற்கொலை செய்துகொண்ட முகேஷ் பாண்டேவுக்கு 2014-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. மூன்று மாத குழந்தையும் இருக்கிறது. புக்ஸார் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்க வருகையில் குடும்பத்தினரை உடன் அழைத்து வராமல் தனியாகவே வந்ததாகக் கூறப்படுகிறது. 

உடல் கூறு ஆய்வுக்குப் பிறகு, முகேஷ் பாண்டேவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close