Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

5-ம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவமனை நடத்திய போலி மருத்துவர் கைது!

நெல்லையில், 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு மருத்துவமனை நடத்திய போலி மருத்துவரை, காவல்துறையினர் கைது செய்தனர். 

நெல்லையில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிவருவதால், அதைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, நெல்லை டவுன், பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் வகையில், சுகாதாரத் துறையினர் வீடு வீடாகச் சென்று தண்ணீர் தேங்கும் இடங்களை ஆய்வுசெய்து, அதில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்துவருகிறார்கள். 

போலி மருத்துவர்

 ரகுமானியா பேட்டை பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தின் உள்ளே, நகர் நலப் பணியாளர்கள் நுழைய முயன்றபோது, அங்கிருந்தவர்கள் அவரை அனுமதிக்கவில்லை. அதையும் மீறி உள்ளே சென்றபோது, அங்கு சுகாதாரமற்ற சூழல் இருந்ததை ஊழியர்கள் கண்டனர். அந்த இடத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டதால், நகர் நல அலுவலரான பொற்செல்வனுக்குத் தகவல் கொடுத்தனர். அவர், அங்கு சென்று பார்த்தபோது, ’ரஹ்மான் சித்தா அகத்தியர் இயற்கை மூலிகை மருத்துவமனை’ என்கிற போர்டு இருந்தது.

போலி மருத்துவமனை

சுகர், பித்தம், வாயு, வயிற்றுவலி, சொறி சிரங்கு, எலும்பு முறிவு, பல்வலி, கல் அடைப்பு, என ஏறக்குறைய அனைத்து வகையான நோய்களுக்கும் மருத்துவம் செய்யப்படும் என எழுதப்பட்டிருந்தது. இந்த மருத்துவமனையின் மருத்துவரான ஷேக் ரஹ்மான் குறித்து அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்ததால், காவல்துறையில் புகார் செய்தனர். போலீஸார் விசாரணை நடத்தியதில், 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவர், பி.எஸ்.எம்.எஸ் எனப் பட்டத்தைப் போட்டுக்கொண்டதுடன், அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவமனை என்றும் அதற்கான பதிவு எண்ணையும் பொய்யாக எழுதியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மருத்துவமனை

இதனால், போலி மருத்துவர் ஷேக் முகம்மது கைது செய்யப்பட்டார். அவர் இங்கு மட்டும் அல்லாமல் களக்காடு, சேரன்மகாதேவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மருத்துவம் செய்துள்ளார். அவரது மருத்துவமனையில் அலோபதி மருந்துகள், ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டன.தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close