Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தூத்துக்குடி குடோனில் பதுக்கப்பட்ட செம்மரக்கட்டைகள்!

தூத்துக்குடியில் வெளிநாட்டுக்கு கடத்தவிருந்த 3.5 டன் எடையுள்ள ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

red sandal

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் தனியாருக்குச் சொந்தமான வீட்டுடன் சேர்ந்த குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் படி, அதிகாரிகள் இன்று அப்பகுதிக்குச் சென்று சோதனை செய்ததில் மூன்றரை டன் எடையுள்ள செம்மரக்கட்டைகளைப் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.1 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். பதுக்கிய செம்மரக்கட்டைகளைப் பறிமுதல்செய்து இதில் சம்மந்தப்பட்டவர்களின் பின்னணி குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்துவருகின்றனர்.

தூத்துக்குடியில் வ.உ.சி துறைமுகம் இருப்பதால், கண்டெய்னர்களில் செம்மரக்கட்டைகளைப் பதுக்கி சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகின்றனர். கடந்த வருடம் மே மாதம் தூத்துக்குடி மாதவன் நகரில் உள்ள தனியாருக்குச் சொந்தமான குடோனில் 20 டன் எடையுள்ள ரூ. 8 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. இதே செப்டம்பரில் தூத்துக்குடி மாப்பிளையூரணி பகுதியில் கண்டெய்னரில் 7 டன் எடையுள்ள ரூ.3 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை பதுக்கி வ.உ.சி துறைமுகம் வழியாக கடத்த முயன்றபோது பறிமுதல் செய்யப்பட்டது. நவம்பரிலும் தூத்துக்குடி துறைமுகம் வழியாக உப்புபண்டல்கள் என்ற பெயரில் சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற 16 டன் செம்மரக்கட்டைகளையும் சுங்கத்துறை மற்றும் வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்தனர். 

red sandal

’’கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் தூத்துக்குடியில் 80 டன் செம்மரக்கட்டைகள் பல பகுதிகளிலிருந்தும் கடத்தி வரப்பட்டு தூத்துக்குடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து அனைத்து குடோன்களிலும் சோதனை நடக்கும்‘’  என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடியில் செம்மரக்கட்டைகள் துறைமுகம் வழியாக மட்டுமல்லாமல் கார், லாரிகளில் குறைவான அளவிலும் கடத்தப்படுகிறது. இவ்வாறு இவை கடத்தப்படுவதும் பிடிபடுவதும் தொடர்கதையாகி வருவதால் அதிகாரிகள் முழு வீச்சில் கண்காணிக்கத் துவங்கியுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close