Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதுச்சேரி வழக்கறிஞர்கள் இரண்டாவது நாளாக போராட்டம்!

புதுச்சேரியில், இரண்டாவது நாளாக இன்று வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

புதுச்சேரி

தகுதித் தேர்வு அடிப்படையில் நீதிபதிகளை நியமிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வழக்கறிஞர்கள் நலச் சங்கத்தில் சட்டக் கமிஷன் சீர் திருத்தங்களைக் கொண்டுவரும் முயற்சிக்கும் தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றது. மேலும், இந்த நடவடிக்கைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கையும் வைத்திருக்கிறது.

இந்நிலையில், அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, இரண்டு நாள்கள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது வழக்கறிஞர்கள் சங்கம். இந்தப் போராட்டத்தில், 13 நீதிமன்றங்களைச் சேர்ந்த சுமார் 700 வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இரண்டு நாள்களாக, இவர்கள் எந்த வழக்கு விசாரணைகளிலும் ஆஜராகாததால், நீதிமன்றப் பணிகள் முற்றிலும் முடங்கின. இதனால், பல்வேறு வழக்கு விசாரணைகளுக்கு வந்த பொதுமக்கள் திரும்பிச்சென்றனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close