Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இறந்த பின்பும் வாழலாம்... விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் புதுக்கோட்டை கலெக்டர்!

உடல்உறுப்பு தான விழிப்பு உணர்வுக்காக, புதுக்கோட்டையில் 100 அடி நீள ஓவியம் வரையும் நிகழ்ச்சியை, மாவட்ட கலெக்டர் கணேஷ் தொடங்கிவைத்தார்.

புதுக்கோட்டை கலெக்டர்

 

உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி, புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில், இன்று காலை புதிய பேருந்து நிலையத்தில் விழிப்பு உணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் கணேஷ் கலந்துகொண்டு 100 அடி நீள ஓவியம் வரையும் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார்.

ரோட்டரி சங்க மருத்துவர் செந்தில்குமார் பேசும்போது, "தற்போது, மக்களிடையே உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்பு உணர்வு அதிகரித்துள்ளது. நாம், நம்முடைய  எல்லா உடல் உறுப்புகளையும் தானம் செய்துவிட முடியாது. கல்லீரல், சிறுநீரகம், இதயம், கணையம், சிறுகுடல், நுரையீரல், கண்கள், இதயவால்வு உள்ளிட்ட சில குறிப்பிட்ட உறுப்புகளை மட்டுமே தானம் செய்ய முடியும். சாதாரணமாக, ஒரு மனிதனுக்கு ஏழு பிறவிகள் உண்டு எனக் கூறப்படுகிறது. ஆனால், உங்கள் உடல் உறுப்பு தானத்தின்மூலம் ஒன்பது பிறவிகள் வாழ முடியும். உடல் உறுப்பு தானத்தோடு நின்றுவிடாமல், உடல் தானம் கொடுக்கவும் மக்கள் முன்வர வேண்டும் " எனக் கூறினார்.

ஓவியம்

100 அடி நீள ஓவியம் வரையும் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து கலெக்டர் கணேஷ் பேசுகையில்,  "தானத்தில் சிறந்தது உடல் உறுப்பு தானம்"  உடல் உறுப்புகள் கொடை என்பது நோயுற்று, உடல் உறுப்பு பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, மற்றொருவர் அந்த உடல் உறுப்பை தானமாக அளிப்பதாகும்.  மூளைச்சாவு ஏற்பட்ட ஒருவர் செய்யும் உடல் உறுப்பு தானம், பலரின் வாழ்வை வளப்படுத்தும். தமிழகம் ழுழுவதும் சமீப நாள்களாக உடல் தானம் செய்யும்போக்கு வளர்ந்துவருகிறது. அதேபோல, உறுப்பு தானம் பற்றிய விழிப்பு உணர்வை பிரபலப்படுத்துவதற்கான முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அனைவரும் உடல் உறுப்பு தானத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். நிறைவாக, உடல் உறுப்பு தானம் பற்றிய துண்டுப்பிரசுரங்கள்  பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close