Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திண்டுக்கல் அண்ணா பொறியியல் கல்லூரி முதல்வருக்கு எதிராக வழக்கு!

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி திண்டுக்கல்லில் அமைந்துள்ளது. இக்கல்லூரியின் முதல்வர் சித்ராதேவி மீது  நடவடிக்கை எடுக்கும்படி திண்டுக்கல் ரெட்டியார்சத்திரத்தைச் சேர்ந்த மகாலெட்சுமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை நேற்று தாக்கல்செய்துள்ளார்.

madurai hc

அதில், ''திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் துப்புரவு பணியாளர்களாக  நானும் என் கணவரும் உள்ளோம். முதல்வர் சித்ராதேவி என்னை தன்னுடைய வீட்டில் வேலைசெய்ய வைத்தார்.  அவர் வீட்டிலேயே தங்கியிருந்து வேலைசெய்யச் சொன்னார்.  நான் முடியாது என்று மறுத்ததற்கு என்னைக் கடுமையாக இழிவுபடுத்தி திட்டினார். அவர் கணவரும் என்னை டார்ச்சர் செய்தார். இது சம்பந்தமாக கலெக்டரிடம் மனு கொடுத்தேன். அந்த மனுவைத் திரும்பப் பெறுமாறு, காவல்துறையை வைத்து மிரட்டுகிறார், கல்லூரியில் வேலைசெய்ய வந்த என்னை, முதல்வர் சித்ராதேவியின் சொந்த வேலைகளைச் செய்ய வைத்ததற்கும், மிரட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இது சம்பந்தமாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், திண்டுக்கல் கலெக்டர், எஸ்.பி.க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close