Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’பதவி பறிபோகும்!’ - எச்சரித்த தினகரன்

டி.டி.வி.தினகரன்

அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் நியமனம் சட்டவிரோதம் என்று முதலமைச்சர் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது என்று கூறிய அ.தி.மு.க அம்மா அணியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தால் தீர்மானத்தில் கையெழுத்திட்டவர்களின் பதவி பறிபோகும் என்று தெரிவித்தார்.

அ.தி.மு.க அம்மா அணியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் மாமியார் சந்தானலெட்சுமியின் படத்திறப்பு நிகழ்ச்சி தஞ்சாவூரில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தினகரன், திவாகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், பல நூற்றாண்டுகள் அ.தி.மு.க சிறப்பாக செயல்படும். அ.தி.மு.க என்பது மாபெரும் இயக்கம். 100 ஆண்டுகள் ஆனாலும் தலைசிறந்த இயக்கமாக அ.தி.மு.க இருக்கும் என ஜெயலலிதா சென்னார். ஜெயலலிதா விருப்பபடி அ.தி.மு.க செயல்படும்.

எதிரிகளின் செயலால் சில காலம் கட்சியில் இல்லாமல் இருந்தேன். சுயநலம் மற்றும் பயத்தின் காரணமாக பழனிசாமி அணியினர் பேசுகின்றனர். சில நண்பர்கள் சுயநலம், பயம் காரணமாக சசிகலா குடும்பத்தை வெளியேற்ற வேண்டும் எனச் சொல்வார்கள். அ.தி.மு.க. நன்மைக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன். அ.தி.மு.க-வின் நலன் கருதி எதையும் துணிச்சலாக மேற்கொள்வேன்.

முதலமைச்சர் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது. யூகங்கள், தகவல்கள் எனப் பரவும் செய்திகளுக்குப் பதில் அளிக்க முடியாது, தேர்தல் ஆணைய உத்தரவை மீறி நேற்று தீர்மானம் வெளியிட்டுள்ளனர். தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தால் தீர்மானத்தில் கையெழுத்திட்டவர்களின் பதவி பறிபோகும். ஐந்து ஆண்டுகள் ஆட்சி நீடிக்குமா என்பதை முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்களிடம் கேட்க வேண்டும். திவாகரனைக் கட்சியில் சேர்ப்பது குறித்து சசிகலா முடிவெடுப்பார்.

2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் அ.தி.மு.க-வே ஆட்சியமைக்க வேண்டும் என்பது எனது விருப்பம். துணைப் பொதுச் செயலாளருக்கான பொறுப்புகள் நிறைவேற்றப்படும். தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும்போது அதைச் சிந்தித்துக்கொள்வோம். காவல்துறை அனுமதி மறுத்தாலும் மேலூரில் பொதுக்கூட்டம் நடப்பது நிச்சயம்" என்று கூறினார்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close