Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உதவி செய்த போலீசார்; நெகிழ்ச்சியில் மலைகிராம மக்கள்.!

தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள ஐந்து கிராம மக்களுக்கு அடிப்படைப் பொருள்களை திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி கார்த்திகேயன் தலைமையில் போடி  போலீஸார் வழங்கினர்.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஒன்றான போடி மலைப்பகுதியில் இருக்கும் மலை கிராமங்களான பனங்குடை, சோலையூர், மேலப்பரப்பு, சிறைக்காடு ஆகிய ஐந்து மலைவாழ் மக்களின் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 150 குடும்பங்களுக்கு வீட்டுக்குத் தேவையான அடிப்படைப்பொருள்களை வழங்கும் நிகழ்ச்சி சோலையூர் கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், போடி டி.எஸ்.பி பிரபாகரன், போடி இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாசலம், சேகர் மற்றும் நக்சல் தடுப்புப்பிரிவு போலீஸார்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வீட்டுக்குத் தேவையான பாத்திரங்கள் இரண்டு, பாய், போர்வை, ஆடைகள் அடங்கிய பொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் உணவும் வழங்கப்பட்டது. மேற்குத்தொடர்ச்சி மலையின் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட காடுகளாக அறிவிக்கப்பட்டபோது, மலையில் இருந்து இறக்கப்பட்டவர்கள் போடியைச்சுற்றி அரசால் குடியமர்த்தப்பட்டனர்.

அவர்களுக்குத் தேவையான வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு தேவையான அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்பட்டது. ஆனால், முறையான பராமரிப்பு மற்றும் அரசின் கண்காணிப்பு இல்லாமல் அடிப்படை வசதிகள் சீர்கெட்டு மிகவும் சிரமப்படும் சூழலில் இருக்கிறார்கள். மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த பயனும் இல்லை. இந்நிலையில், அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கும் கடமை உடைய வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அமைதியாக இருக்கும்போது, காவல்துறையில் இருந்து கிடைத்த இந்த சிறிய உதவியை அம்மக்கள் பெரியதாக நினைத்து காவல்துறைக்கு நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியாக இருந்தது. காட்டில் இருந்து இறக்கப்பட்ட இம்மக்களுக்கு குடியிருக்க இடமும், விவசாயம் செய்ய 10 ஏக்கர் நிலமும் கொடுக்க வேண்டும் என்பதுதான் சட்டம். ஆனால், இன்று வரை விவசாயம் பார்க்க இவர்களுக்கு நிலம் ஒதுக்கப்படாததால், அருகில் இருக்கும் தென்னை, மா தோட்டங்களுக்கு தினக்கூலிகளாக சென்றுகொண்டிருக்கிறார்கள். கடல்போல் இருக்கும் மலையில் சுதந்திரமாகத் திரிந்துகொண்டிருந்த மக்கள் இன்று கானிநிலம் இல்லாது இருப்பது வேதனையின் உச்சம்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close