Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்சி சிவாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த வெங்கைய நாயுடு!

மாநிலங்களவையில் தமிழில் பேசத் தொடங்கிய தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவாவுக்கு, அவைத் தலைவர் வெங்கைய நாயுடு அனுமதி அளித்தார்.  

திமுக மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா


மக்களவையில் அ.தி.மு.க. எம்பி தம்பிதுரை தமிழில் பேசியதற்கு மற்ற மாநில எம்.பி-க்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். தமிழில் பேசுவதாக இருந்தால், முன்னதாகவே மொழிபெயர்ப்புக்கான நோட்டீஸ் அளித்திருக்க வேண்டும் என்று கூறி அவர்கள் வாதிட்டனர். அதற்குப் பதிலளித்துப் பேசிய தம்பிதுரை, பிராந்திய மொழிகளுக்கும் உரிய முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். 

இந்தநிலையில், மழைக்காலக் கூட்டத்தொடரில் இறுதி நாளான இன்று, மாநிலங்களவையின் தலைவராகவும், குடியரத் துணைத் தலைவராகவும் வெங்கைய நாயுடு பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து, அவர் மாநிலங்களவையை இன்று நடத்தினார். அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து பிரதமர் மோடி, எதிர்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பேசினார். மேலும், பல்வேறு எம்.பி-க்களும் வெங்கைய நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்துப் பேசினர். அப்போது பேசிய தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, தமிழில் தனது பேச்சைத் தொடங்கினார்.

ஆனால், மொழிபெயர்ப்பு வசதி செய்து தரப்படவில்லை என்பதால், ஆங்கிலத்தில் உரையாற்றினார். அப்போது குறுக்கிட்ட வெங்கைய நாயுடு, நீங்கள் இரண்டு மொழிகளிலும் பேசலாம், அவை இரண்டுமே எனக்குப் புரியும் என்று கூறினார். மாநிலங்களவையின் உறுப்பினராக இருக்கும்போதே அவைத் தலைவராகும் முதல் நபர் நீங்கள்தான் என்று கூறி, ரயில்வே கமிட்டியில் இருவரும் ஒன்றாகப் பணியாற்றிய நாட்களை நினைவுகூர்ந்தார். அப்போது பேசிய சிவசேனா கட்சி உறுப்பினர் சஞ்சய் ராவத், நீங்கள் ஒப்புக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் இந்திதான் இணைப்பு மொழி, நாட்டின் தேசிய மொழி என்று கூறினார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close