Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நதிகள் இணைப்புக்கு நம்பிக்கை அளித்த மத்திய அரசு! - ஓர் ஆச்சர்ய கடிதம்

நாட்டில் உள்ள முக்கிய நதிகளை இணைப்பதற்காக பி.என்.நவலவாலா தலைமையிலான குழு, இதுவரை 13 முறை கூடிப் பேசியுள்ளதாக, தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

கே.எஸ்.ராதாகிருஷ்ணன்இந்தியாவில் நதிநீர் இணைப்பு என்பது வெறும் கனவாகவே இருந்து வருகிறது. நதிகளை இணைப்பது தொடர்பாக, தி.மு.க செய்தித் தொடர்பாளர் கே.எஸ். இராதாகிருஷ்ணன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் தீர்ப்பையொட்டி, பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்துக்குத் தற்போது தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் கடிதம் மூலம் பதில் அனுப்பியுள்ளது. அந்தப் பதிலில், 'உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, நதிகள் இணைப்பது தொடர்பாக குழு அமைக்கப்பட்டது. நதிகள் இணைப்புக்கு மத்திய அரசு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்தக் குழு இதுவரை 13 முறை கூடியுள்ளது. விரைவில் நதிகள் இணைப்புக்கான பணிகள் தொடங்கும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். " கடந்த 30 ஆண்டுகளாக நதிகள் இணைப்புக்காகப் போராடி வருகிறேன். உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததோடு மட்டுமல்லாமல், இதுதொடர்பாக, மூன்று பிரதமர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்துக்கு, நம்பிக்கை அளிக்கக் கூடிய பதில் வந்துள்ளது. 

தமிழகம், கேரளா போன்று நீர்வளம் மற்றும் வன வளம் கொண்ட மாநிலம் அல்ல. ஒவ்வொரு முறையும் தண்ணீருக்காக மற்ற மாநிலங்களுடன் போராடிக் கொண்டிருக்கிறோம். எனது கனவு, கங்கை நதி கன்னியாகுமரியில் இருக்கும் நெய்யாற்றில் ஓட வேண்டும் என்பதுதான். இதுவரை இல்லாத அளவுக்கு மத்திய அரசிடமிருந்து நல்ல பதில் வந்துள்ளது" என்றார் நெகிழ்ச்சியோடு. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close