Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மசூர் பருப்பு கொள்முதலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

பொதுவிநியோகத் திட்டத்தில் மசூர் பருப்பு கொள்முதலுக்கு விதித்த தடையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது. 


மிழக அரசு மசூர் பருப்பை பொதுவிநியோகத் திட்டத்தில் வழங்குவதற்கான அரசாணையைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் ஆதிஜெகநாதன் என்பவர் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், 'மசூர் பருப்பை உண்பதால் உடலுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் பொதுவிநியோகத் திட்டத்தில் மசூர் பருப்பு வழங்குவதைத் தடை செய்ய வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்து. அந்த வழக்கில் ஏற்கெனவே, மசூர் பருப்பு கொள்முதல் செய்வதற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்திருந்தது.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'மசூர் பருப்பில் கேசரிப் பருப்பு கலப்படம், நிறமூட்டிகள் ஆகியவற்றைக் கலக்கக் கூடாது. ஆய்வகங்கள் மூலம் பருப்பின் தரத்தை ஆய்வு செய்த பின்னரே விநியோகம் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close