Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனுமதி கிடைத்துவிட்டது! கொண்டாட்டத்தில் டி.டி.வி.தினகரன் தொண்டர்கள்!

ttv

டி.டி.வி.தினகரனுக்கு எதிராக ஒரு பக்கம் எதிர்ப்பு அலைகள் சூழ்ந்தாலும் மற்றொரு பக்கம் ஆதரவுக் கரங்கள் உயர்ந்துகொண்டே இருக்கிறது. மதுரை மாவட்டத்தில் மேலூர் தொகுதி அ.தி.மு.க-வின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்துவருகிறது.

முன்னாள் எம்.எல்.ஏ சாமி மேலூர் செல்லப்பிள்ளை, ஹாட்ரிக் நாயகன் என்று அழைக்கப்பட்டு வருகிறார். ஆண்டுதோறும் மேலூர் பகுதி மக்களுக்கு ஜெயலலிதா பிறந்தநாள் அன்று 10 ஆயிரம் நபர்களுக்கு லெக் பீஸுடன் பிரியாணி வழங்குவதில் பெயர் பெற்றவர். ஜெயலலிதா மறைவிற்கு பின் டி.டி.வி.தினகரன் அணிக்குத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவந்தார்.  இந்நிலையில் வரும் 14-ம் தேதி மேலூரில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு டி.டி.வி.தினகரனைத் தலைமை ஏற்க அழைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் தினகரனும் கண்டிப்பாகக் கலந்துகொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விழாவுக்கு அனுமதி கோரியதற்கு காவல்துறை எந்தவித அனுமதியோ நிராகரிப்போ செய்யாமல் அமைதி காத்தது. இந்நிலையில் மேலூர் அ.தி.மு.க அம்மா அணியின் நகரச் செயலாளர் சரவணன் போலீஸ் பாதுகாப்பு கேட்டு உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் மனு அளித்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர், பொதுகூட்டத்துக்கு அனுமதி வழங்கியும், காவல்துறைப் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். இதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close