Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீட் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதலை உடனடியாகப் பெறவும்! தமிழக அரசுக்கு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை

நீட் இரவீந்திரநாத்

”நீட் தேர்வில், தமிழக அரசின் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மற்றும் மத்திய பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான, 85: 15 விழுக்காடு இட ஒதுக்கீடு செல்லாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், தமிழக மாணவர்களின் நலன் காக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்” எனச்  சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

இது குறித்து அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற, இளநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு ஒரு சட்ட மசோதாவும், முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கைக்கு ஒரு மசோதாவும் தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டு ஏகமனதாக 5 மாதங்களுக்கு முன்பாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாக்களுக்கு இதுவரை குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு பெற்றுத்தரவில்லை. மாநில அரசும் போதிய அழுத்தத்தைக் கொடுக்கவில்லை” என அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ”மத்திய - மாநில அரசுக்களின் தமிழக நலன்களுக்கு எதிரான செயல்பாட்டால், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இதுவரை நடைபெறவில்லை. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பமும் அச்சமும் கவலையும் நீடிக்கிறது. எனவே, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை உடனடியாகப் பெற்றிட மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டி.எம்., எம்.சிஹெச் போன்ற உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கும், மத்திய அரசின் நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்குப் பெற தமிழக அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களின் 50 விழுக்காடு இடங்களை, அந்தந்த மாநில அரசுகளின் ஒதுக்கீட்டுக்கு வழங்க நடவடிக்கை எடுத்திட வேண்டும். தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே கிடைத்திடும்வகையில் ஆந்திர அரசைப்போல் தமிழக அரசும் சட்டம் கொண்டு வர வேண்டும். ஆண்டு வருமானம் 12 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தை மத்திய- மாநில அரசுகளே ஏற்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close