Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பனைமரத்தில் மோதிய பள்ளி வாகனம்..! உயிர் தப்பிய மாணவ - மாணவிகள்

சாலையோர மரத்தில் பள்ளி வேன் மோதியதில் 17க்கும் மேற்பட்ட மாணவர்கள் மரணப்படுக்கைக்குச் சென்று திரும்பிவந்திருக்கிறார்கள். இந்த நிகழ்வால் பெரம்பலூர் மாவட்டமே சோகமயமாகக் காட்சியளிக்கிறது.

                           

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருவாளந்துறை கிராமத்தில் ஆண்ட்ரூஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. இப்பள்ளிக்குச் சொந்தமான வேன் இன்று காலை வழக்கம் போல் வீ.களத்தூர் அருகேயுள்ள என்.புதூர், மறவனநத்தம் கிராமங்களிலிருந்து 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளியை நோக்கி வேன் வந்துகொண்டிருந்தது.

                        

மறவநத்தம்- மேட்டு சேரிக்கும் இடையில் வேன் வந்துகொண்டிருந்தபோது எதிரி வந்த டாரஸ் லாரிக்கு வழி விடமுயன்றுள்ளார் டிரைவர் சின்னராசு. அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் நிலை தடுமாறி சாலையோரப் பள்ளத்தில் விழுந்து பனைமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் உட்பட  ராஜா, அஸ்வின்குமார், நிஷாந்த் உள்ளிட்ட 17க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

                      

இதைக் கண்ட அப்பகுதிமக்கள் குழந்தைகளை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். டிரைவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு வருடத்துக்கு முன்புகூட ரோவர், தனலெட்சுமி கல்லூரிப் பேருந்துகள் விபத்துகுள்ளானது குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close