Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உதவித்தொகையுடன் பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தை இலவசமாகப் படிக்க வாய்ப்பு!

பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தை உதவித்தொகையுடன் இலவசமாகப் படிக்க, நல்லதோர் வாய்ப்பை வழங்குகிறது சென்னை கிண்டியில் இயங்கிவரும் சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிளாஸ்டிக் இன்ஜினீயரிங் டெக்னாலஜி (சிப்பெட்) நிறுவனம். இது, மத்திய அரசின் கெமிக்கல் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கிவருகிறது. 

பிளாஸ்டிக் தொழில்நுட்பம் சிப்பெட்

இங்கு முதுநிலை, இளநிலை, டிப்ளோமா மற்றும் திறன் சார்ந்த குறுகியகால மேம்பாட்டு வகுப்பு என ஏராளமான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பல்வேறு மத்திய அரசுத் துறைகளுடனும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. தற்போது பவர் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் சமூகத் திட்டத்தின் கீழ் இலவசமாக ஆறு மாதப் படிப்பாக மெஷின் ஆபரேட்டர் & புரோகிராமர் என்ற படிப்பையும், மெஷின் ஆபரேட்டர் - பிளாஸ்டிக்ஸ் புராஸஸிங் படிப்பையும் சொல்லிக்கொடுக்க இருக்கிறது சிப்பெட். 

இந்த இரண்டு படிப்புகளிலும் தலா 40 மாணவர்களைச் சேர்க்கவிருக்கிறார்கள். மெஷின் ஆபரேட்டர் & புரோகிராமர் படிப்புக்கு விண்ணப்பிக்க, பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மெஷின் ஆபரேட்டர் - பிளாஸ்டிக்ஸ் புராஸஸிங் படிப்புக்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு படிப்புகளுக்கும் 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றாலும், தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு வயது வரம்பு விலக்கு அடிப்படையில் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பயிற்சிப் படிப்பில் சேருபவர்களுக்கு இலவசமாகத் தங்கும் வசதியும் உணவும் வழங்கப்படுகின்றன. 

பிளாஸ்டிக் தொழில்நுட்பம் சிப்பெட்

படிப்பில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள், மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது ரேஷன் கார்டுடையும், ஐந்து கலர் போட்டோக்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை எனச் சொல்லப்படுவதால், உடனடியாக விண்ணப்பிக்கலாம். 

பிளாஸ்டிக் தொழில்நுட்பம் சிப்பெட்பயிற்சி குறித்து சிப்பெட் நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் மற்றும் தலைவர், பழனிவேல் ராஜாவிடம் பேசினோம்.

“இரண்டு பயிற்சிகளிலும் தலா 40 இடங்கள் மட்டுமே உள்ளன. இதனால் மாணவர்கள் உடனடியாக விண்ணப்பித்தல் நல்லது. ஆறு மாதப் பயிற்சிக்குப் பிறகு வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்கிறோம். வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு, தங்கும் வசதியுடன் மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகையும் வழங்குகிறோம். உணவு, சீருடை என அனைத்தும் இலவசம். விண்ணப்பங்களை எங்களுடைய இணையதளத்திலேயே பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்" என்கிறார்.

மேலும் விவரங்களுக்கு https://www.cipet.gov.in/centres/hlc-cipet-chennai/pfc.php என்ற இணையத்தளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். 

தமிழக அரசின் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்துடன் இணைந்து சிப்பெட் இன்ஜெக்‌ஷன் மோல்டிங் பயிற்சி வழங்கிவருகிறது. இந்தப் பயிற்சியிலும், வெளியூர் மாணவர்களுக்கு இலவச உணவு, தங்குமிடம், உதவித்தொகையாக நான்கு மாதங்களுக்கு 9,000 ரூபாயும், உள்ளூர் மாணவர்களுக்குப் போக்குவரத்துப் படியாக மாதம் 2,200 ரூபாயும் வழங்கப்படுகிறது.

பிளாஸ்டிக் தொழில்நுட்பம் சிப்பெட்

நான்கு மாதப் பயிற்சிக்குப் பிறகு இரண்டு மாதம் சம்பளத்துடன் தொழில்நுட்ப நிறுவனத்தில் பயிற்சி அளிக்கப்படும். விருப்பம் உள்ள மாணவர்கள் தொடர்ந்து அதே நிறுவனத்தில் வேலைவாய்ப்பையும் பெறலாம். இந்தப் பயிற்சியில் 8-ம் வகுப்பில் தேர்ச்சிபெற்றவர்கள் சேரலாம். வயது வரம்பாக 35 வரை நிர்ணயித்திருக்கிறார்கள். பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள், சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் அமைந்துள்ள சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிளாஸ்டிக் இன்ஜினீயரிங் டெக்னாலஜி (சிப்பெட்) நிறுவனத்துக்கு, தங்களுடைய அசல் மற்றும் சான்றிதழ்களின் நகலுடன் நேரில் சென்றால், உடனடியாக படிப்பில் சேரலாம்.

மேலும் விவரங்களுக்கு https://www.cipet.gov.in

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close