Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

6 வயது சிறுவன் மரணம்: சாலை மறியல் செய்த உறவினர்கள்..!

திருப்பூரில் 6 வயது சிறுவன் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு இறந்துபோனதாக உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பழவஞ்சிபாளையத்தைச் சேர்ந்த சதாசிவம் என்பவரின் 6 வயது மகன் ரித்தீஷ். கடந்த 10 நாள்களுக்கு முன்னர், ரித்தீஷை காய்ச்சல் காரணமாக திருப்பூர் - தாராபுரம் சாலையில் உள்ள சக்தி என்ற தனியார் மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கு சிறுவனுக்கு 2 நாள்கள் தொடர் சிகிச்சை அளித்து சற்று உடல்நலம் தேரியதும் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது மருத்துவமனை நிர்வாகம். பின்னர், இரண்டு நாள்கள் கழித்து மீண்டும் அதே மருத்துவமனைக்குச் சிறுவனை பரிசோதனைக்காக அழைத்துச் சென்று வந்திருக்கிறார்கள் பெற்றோர்.

இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் இருந்த சிறுவன் ரித்திஷுக்கு வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து ரத்த வாந்தியும் எடுத்திருக்கிறான் சிறுவன். உடனே பதறிப்போன ரித்தீஷின் பெற்றோர் அவரை அழைத்துக்கொண்டு மீண்டும் அதே தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவனின் உடம்பில் ஊசி போட்டு தீவிர சிகிச்சை அளித்திருக்கிறார்கள். ஆனால், தொடர்ந்து அளித்த சிகிச்சையும் பலனளிக்காமல் சிறுவன் மருத்துவமனையிலேயே இறந்துபோனார்.

சோகத்தில் ஆழ்ந்த சிறுவனின் உறவினர்கள், தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால்தான் சிறுவன் ரித்திஷ் இறந்துபோய்விட்டதாக கருதி மருத்துவமனை நிர்வாகத்துக்கு எதிராக திருப்பூர் - தாராபுரம் சாலையில் மறியல் போராட்டத்தை நடத்த தொடங்கினார்கள். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி இறந்துபோன சிறுவனின் உறவினர்களை சுமுகமாகக் களைந்து செல்ல வைத்தனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close