Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக ஆகஸ்ட் 15-ல் உண்ணாவிரதம் - திருப்பூர் மக்கள் முடிவு!

மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள மதுபானக் கடைகளை உடனே அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட வீரபாண்டி என்ற இடத்துக்கு அருகில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். அப்பகுதியில் மட்டும் இரண்டு அரசு மதுபானக் கடைகள் செயல்பட்டு வருவதால், அப்பகுதிப் பெண்களும், குழந்தைகளும் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். 

இப்பகுதி மதுக்கடைகளுக்கு வரும் குடிமகன்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால், மாலை வேளைகளில் கடைகளுக்குச் செல்வதற்குக்கூட பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளுக்கு வரும் குடிமகன்கள், தங்களின் வாகனங்களையும் ஆங்காங்கே நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்து நெருக்கடியும் தொடர்ந்து ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது. குறிப்பாக சம்பந்தப்பட்ட இரண்டு டாஸ்மாக் கடைகளுமே விதிகளை மீறி செயல்பட்டு வருகின்றன என்ற புகாரும் தொடர்ந்து நிலவுவதால், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த டாஸ்மாக் கடைகள் இரண்டையுமே அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளனர் அப்பகுதி மக்கள். இருப்பினும் ’மாவட்ட நிர்வாகம் அந்த டாஸ்மாக் கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆகஸ்ட் 15 -ம் தேதி சுதந்திர தினத்தன்று கருப்புக் கொடி ஏந்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம்’ என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close