Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீட் தேர்வுக்கு எதிராக நாகர்கோவிலில் போராட்டம்!

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட  நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி குமரி மாவட்டம்  நாகர்கோவிலில் மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு  தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக கண்டனப் போராட்டம் நடைபெற்றது.  ’

பொது மருத்துவம், பல் மருத்துவம் , மற்றும்  ஓமியோபதி துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத் தேர்வானது அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும். தமிழ்  உள்ளிட்ட 10 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்று மத்தியஅரசு தெரிவித்துள்ளது. இந்தத் தேர்வினால் தமிழகத்தில் உள்ள கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக தமிழக மாணவர்களும் பெரும் பின்னடைவைச் சந்தித்து உள்ளனர். எனவே இந்த  நீட் தேர்வினை ரத்து செய்யக் கோரி  பல சமுக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் குமரிமாவட்டத்தில் தொடர்ந்து போராட்டம்  நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக மத்திய அரசால்  கொண்டுவரப்பட்ட  நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என வலியுறுத்தி இன்று கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவில் உள்ள தலைமை தபால்  நிலையம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாகப் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய, மாநில அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close