Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு..!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.பி-க்கள் அனைவரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்துப் பேசினர். 


இந்தியாவின் 15-வது துணைக் குடியரசுத் தலைவராக வெங்கைய நாயுடு பதவியேற்றார். அவருக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். டெல்லி சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் எடப்பாடி பழனிசாமி. அதன்பின்னர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அவர் நேரில் சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமியுடன் அவரது ஆதரவு எம்.பி-க்கள் அனைவரும் உடனிருந்தனர். பன்னீர்செல்வமும் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், இரு அணிகளின் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close