Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திறந்த வெளி கழிப்பிடமற்ற மாவட்டமாக தேனியை உருவாக்குவோம் – மாவட்ட கலெக்டர்.!

தேனி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை மற்றும் தேனி சுகாதார இயக்கத்தின் சார்பில் திறந்தவெளி கழிப்பிடமற்ற மாவட்டமாக தேனி மாவட்டத்தை உருவாக்குவது குறித்து பள்ளி மாணவ மாணவியர் கலந்துகொண்ட விழிப்புஉணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம் தொடங்கிவைத்துப் பேசிய போது, “பொதுமக்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தைத்  தவிர்க்கும் பொருட்டும், பாதுகாப்பற்ற முறையில் சுற்றுப்புறச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதை தவிர்க்கும் பொருட்டும், திறந்தவெளியில் மலம் கழிப்பதினால் ஏற்படும் நோய்கள் பரவுதலை தவிர்ப்பதற்கும், சுகாதாரத்தினை மேம்படுத்திடவும், கழிப்பறையைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்தவே இந்தப் பேரணி.

தங்கள் குடியிருப்புகளில் கழிப்பறை வசதி ஏற்படுத்த ஆசைப்பட்டால், அதற்கு அரசு 12 ஆயிரம் ரூபாய் மானியம் கொடுக்கிறது. கழிப்பறை கட்ட இட வசதி இல்லாத பட்சத்தில் பொதுக்கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்படும். அதனடிப்படையில் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் வரும் ஆகஸ்ட் மாதமும், போடி, உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் செப்டம்பர் மாதமும், மயிலாடும்பாறை, பெரியகுளம், கம்பம் ஆகிய ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நவம்பர் மாதமும் திறந்தவெளி கழிப்பிடமற்ற பகுதிகளாக மாற்ற சம்மந்தப்பட்ட துறை நிர்வாகத்தினர் கடுமையாகப் பணி செய்துகொண்டிருக்கிறார்கள். விரைவில் தேனி மாவட்டத்தை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத, சுகாதாரம் மிக்க மாவட்டமாக உருவாக்குவோம்” என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close