Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“நாங்க சென்னைய விட்டு நகரவே முடியாதா”... பரிதவிக்கும் பயணிகள்

நான்கு நாள்கள் தொடர் விடுமுறை காரணமாக தங்கள் சொந்த ஊர்களுக்குப் படை எடுத்திருக்கும் பயணிகளால் சென்னை நிலை குலைந்து போயிருக்கிறது. 

கோயம்பேடு

இன்றிலிருந்து இரண்டு நாள்கள் வார விடுமுறை என்பதாலும் திங்கள் கோகுலாஷ்டமி, செவ்வாய் சுதந்திர தினம் என்பதாலும் சென்னை வாசிகளுக்கு நான்கு நாள்கள் விடுமுறை கிடைத்திருக்கிறது. இந்த விடுமுறையைக் கொண்டாட கல்லூரி மாணவர்களும், ஐ.டி கம்பெனிகளில் வேலை பார்க்கும் இளைஞர்களும் நேற்று மாலையிலிருந்தே தங்கள் சொந்த ஊர்களுக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள். வெளியூர்களுக்குச் செல்லும் ரயில்கள் அனைத்திலும் கூட்டம் நிரம்பியதால் பேருந்துகளிலேயே பெரும்பாலானவர்கள் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்ட தனியார் பேருந்து நிறுவனங்கள் வழக்கம்போலவே டிக்கெட் விலையை திடீரென உயர்த்த விழி பிதுங்கி நிற்கிறார்கள் ஆயிரக்கணக்கான பயணிகள். 

கோயம்பேடு அரசுப் பேருந்துகள் நிற்கும் இடத்திற்கு நாம் சென்றபோது மழை வேறு பெய்து கொண்டிருந்தது. கூட்டம் கூட்டமாக மழையில் நனைந்து கொண்டே பஸ்ஸில் அடித்துப் பிடித்து ஏறுகிறார்கள் பலர். அங்கு நிற்பவர்கள் யாரிடமாவது பேசலாம் என்று முயன்றோம். ஆனால், எல்லோரும் பதற்றத்தோடு காணப்பட்டார்கள். 

ட்ராபிக்

“நான் சாயந்திரம் ஆறு மணியிலிருந்து கவர்மென்ட் பஸ்க்காக காத்துக்கிட்டு இருக்கேன் சார். கூட்டம் அதிகமா இருக்குறதால டோக்கன் கொடுத்துதான் பஸ்லயே ஏத்துறாங்க. ஆம்னி பஸ்ல போய்டலாம்னு பார்த்தா 700 ரூபாய் டிக்கெட்ட 1000 ரூபாய்க்கு கொடுக்கறாங்க சார். இப்போ மணி பத்து ஆகிடுச்சு. ஏற்கெனவெ ட்ராபிக் வேற. இனி நான் பஸ் ஏறினாலும் பெருங்களத்தூர தாண்டவே காலைல ஆறு மணி ஆகிடும் போல என்று புலம்பிக்கொண்டே நகர்கிறார் ஒரு இளைஞர். 

“அட, நீ வேற ஏன் தம்பி, நானே அடையாறுல இருந்து 7 மணிக்கு பஸ் ஏறி இப்போதான் கோயம்பேட்டுக்குள்ளயே வந்திருக்கேன். இனி பஸ்சு புடிச்சு ஊருக்குப் போன மாதிரிதான். மழை இல்லன்னு பொலம்புனதுக்கு இன்னைக்குப் பாத்து அடிச்சு ஊத்துது. என்னத்தச் சொல்ல. இனி பஸ்சு புடிச்சு ஊருக்குப் போயி சேந்த மாதிரிதான்” கோபமாகப் பேசிவிட்டுச் செல்கிறார் ஒரு பெரியவர். 

தொடர் விடுமுறை காரணமாக பயணிகளின் வரத்து அதிகமாக இருக்கும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு போக்குவரத்துத் துறை துரிதமாக நடவடிக்கை எடுத்திருந்தால் ஆயிரக்கணக்கான பயணிகளின் வேதனையைக் குறைத்திருக்கலாம்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close