Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதுச்சேரியில் சாராயக் கடையை அடித்து நொறுக்கியப் பெண்கள்!

புதுச்சேரியில், இருவேறு இடங்களில் புதிதாகத் திறக்கப்பட்ட சாராயக் கடையை கிராமத்துப் பெண்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

.புதுச்சேரி

 

புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலை மதகடிப்பட்டு சந்தைத் தோப்புப் பகுதியில் இயங்கிவந்த சாராயக்கடை உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அகற்றப்பட்டது. அந்தக் கடை மதகடிப்பட்டு-கடலூர் சாலையில் நல்லூர் என்ற கிராமத்தில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி பூமி பூஜை போடப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. ஆனால் சுமார் 200-க்கும் மேற்பட்ட அந்த கிராம மக்கள் அந்தக் கடையையும் அங்கிருந்த சாராய கேன்களையும் அடித்து நொறுக்கியதோடு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். உடனே அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதால் மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

 

அதேபோல திருவண்டார்கோயிலை அடுத்த சின்னபேட் என்ற கிராமத்திலும் நேற்று புதியதாக சாராயக்கடை திறக்கப்பட்டது. அதை எதிர்த்து அப்பகுதி மக்கள் விழுப்புரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். அந்நேரத்தில் புதியதாகத் திறக்கப்பட்ட சாராயக் கடையில் சித்திரைசேனை என்பவர் சாராயம் குடித்தபோது பாம்பு கடித்துவிட்டதாக தகவல் பரவியது. அதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிப் பெண்கள் சம்மந்தப்பட்ட அந்த சாராயக் கடையை அடித்து நொறுக்கி சூறையாடினர். இந்தச் சம்பங்களால் அந்தப் பகுதியில் பரபரப்பும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டன.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close